Road to Peace

மஹிந்த ராஜபக்‌ஷ அவர்கள், தனது ஜனாதிபதிக் காலத்தின் முதல் ஐந்து மாதங்களில் மிகவும் கடினமான காலத்தை எதிர்கொண்டார். அவரது தேர்வின் வெறுமனே இரண்டு வாரங்களில், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்ரிரிஈ) இயக்கம், பாதுகாப்புப் படைகள் மீதும் பொதுமக்கள் மீதும் தாக்குதல்களை நடாத்தத் தொடங்கியது. டிசம்பர் 2005இன் ஆரம்பத்திலிருந்து 2006ஆம் ஆண்டில் ஏப்ரல் நடுப்பகுதி வரை, ஏறத்தாழ 600 பேர் வரை எல்ரிரிஈ-ஆல் கொல்லப்பட்ட தூண்டிவிடும் நோக்கிலான வன்முறைகளின் மத்தியில், அப்போதைய ஜனாதிபதி ராஜபக்‌ஷ அவர்கள் பொறுமையையும் சுயகட்டுப்பாட்டையும் வெளிப்படுத்தினால். இதற்காக அவர் சர்வதேச நன்மதிப்பைப் பெற்றார். இராணுவத் தளபதி மீது 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மூலமான கொலைமுயற்சியைத் தொடர்ந்தே, எல்ரிரிஈ தளங்கள் மீதான மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்களுக்கு அனுமதியளித்தார். ஏப்ரல் 2003இல் இடம்பெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளிலிருந்து ஒருதலைப்பட்சமாக வெளியேறியிருந்த எல்ரிரிஈ-உடனான பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பதனூடாக, சமாதானத்துக்கும் பேரம் பேசலுக்குமான தனது அர்ப்பணிப்பை அவர் வெளிப்படுத்தினார். ஆனால், சமாதானத்துக்கான அவரது நடவடிக்கைகளை எல்ரிரிஈ பின்தொடர்ந்திருக்கவில்லை.

கிழக்கிலுள்ள மாவிலாறு அணைக்கட்டை 2006ஆம் ஆண்டில் மூடி, அனைத்துச் சமூகத்தையும் சேர்ந்த 50,000 மக்களுக்கான குடிநீர், விவசாய, வாழ்வாதாரத் தேவைகளுக்கான நீரை இல்லாமற் செய்து, மாபெரும் மனிதாபிமான நெருக்கடிக்கு இட்டுச் செல்லக்கூடிய நிலையை எல்ரிரிஈ ஏற்படுத்திய போது, மக்களின் சார்பில் தீர்க்ககரமான நிலைப்பாடொன்றை எடுக்க மஹிந்த ராஜபக்‌ஷ பின்னிற்கவில்லை. அதனைத் தொடர்ந்து, கிழக்கின் மூதூர், சம்பூர் போன்ற இடங்களிலிருந்து எல்ரிரிஈ-ஐ இல்லாமற் செய்வதற்கும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலைத் துறைமுகத்தின் பாதுகாப்பைப் பலப்படுத்தவும் பாதுகாப்புப் படைகள் முன்னேறியதோடு, இறுதியில் ஒட்டுமொத்த கிழக்கு மாகாணத்தையும் எல்ரிரிஈ-இடமிருந்து ஜூலை 2007இல் விடுவித்தனர்.

பிராந்தியத்திலிருந்து பயங்கரவாதத்தை இல்லாமச் செய்து வருடத்தினுள், உள்ளூராட்சி சபைத் தேர்தல்களையும் முதலாவது கிழக்கு மாகாணத் தேர்தலையும் நடாத்தியனூடாக, பிராந்தியத்தில் ஜனநாயகத்தை மீளக் கொண்டுவர விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டது.எல்ரிரிஈ-இன் முன்னாள் சிறுவர் போராளியான திரு. சிவநேசதுரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக நியமிக்கப்படுவதை கிழக்கு மாகாண சபைத் தேர்தல்கள் கண்டன. எல்ரிரிஈ-இடமிருந்து பிரிந்துவந்த குழுவின் முன்னாள் தலைவரான கருணா அம்மான் என்றறியப்பட்ட திரு. விநாயகமூர்த்தி முரளிதரன், தேசிய  ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சராக நியமிக்கப்பட்போது ஜனநாயகப்படுத்தல் செயற்பாடானது மேலும் மேம்பட்டது.

முழுமையான உட்கட்டமைப்பு அபிவிருத்தி, பிராந்தியத்தில் முதலீட்டுக்கான புதிய வாய்ப்புகள் என்பவற்றைக் கொண்ட கிழக்கின் பொருளாதார அபிவிருத்திக்கான பாரிய முன்னெடுப்பான கிழக்கின் உதயம், விரைவில் தொடங்கப்பட்டது. ஜனநாயகத்துக்கான அவரது தொடர்ச்சியான அர்ப்பணிக்கு அமைய, கிழக்கு மாகாண சபையின் தேர்தல்கள் 2012ஆம் ஆண்டில் மீண்டும் நடாத்தப்பட்டதோடு, ஜனாதிபதி தலைமையிலான ஐ.ம.சு.கூ பெரும்பான்மையைப் பெற்றது.

வடக்கின் விடுதலை

மாவிலாற்றை மீண்டும் கைப்பற்றுவதில் இராணுவப் படைகள் கண்ட வெற்றியைத் தொடர்ந்து, தீவின் வடக்குப் பகுதியை எல்ரிரிஈ-இன் பிடியிலிருந்து விடுவிப்பதற்கான மாபெரும் மனிதாபிமான இராணுவ நடவடிக்கையின் ஆரம்பம் இடம்பெற்றது. செப்டெம்பர் 2009 இலிருந்து, பூநகரி, கிளிநொச்சி, ஆனையிறவு, முல்லைத்தீவு ஆகிய எல்ரிரிஈ-இன் பலமான கோட்டைகளில் அதைத் தோற்கடித்து, இராணுவப் படைகள் வடக்கில் முன்னேறியதோடு, மே 19, 2009இல் இறுதியாக அவ்வமைப்புத் தோற்கடிக்கப்பட்டது.

மோதலின் இறுதிக்கட்டத்தில், தமிழ் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகவும், பின்னர் பணையக் கைதிகளாகவும் எல்ரிரிஈ பிடித்து வைத்திருந்து தனது இரக்கமற்ற பண்பை வெளிக்காட்டியதோடு, ஏதாவது வகையிலான வெளிநாட்டு உதவியுடன் தப்பிக்க எதிர்பார்த்திருந்த அதன் தலைமைத்துவத்தின் பாதுகாப்புக்காக இதைச் செய்திருந்தது.

மோதலின் இறுதிக்கட்டத்தின் போது, எல்ரிரிஈ-உடன் போர் நிறுத்தமொன்றை ஏற்படுத்த அழுத்தங்களை வழங்கிய மேற்கத்தேய சக்திகளுக்கும் சர்வதேச நிறுவனங்களுக்கும் எதிராக அப்போதைய ஜனாதிபதி ராஜபக்‌ஷ எடுத்த உறுதியான நிலைப்பாடானது, எல்ரிரிஈ-இனதும் அதன் பயங்கரவாதத்தினதும் வெற்றிகரமான தோற்கடிப்புக்கு மிகவும் முக்கியமானதாக அமைந்தது.

பயங்கரவாதத்தின் தோற்கடிப்பைத் தொடர்ந்து, வடக்கில் ஜனநாயகத்தை மீளக்கொண்டுவருவதற்கான முக்கியமான செயற்பாடுகளை ஜனாதிபதி ராஜபக்‌ஷ மேற்கொண்டார். பயங்கரவாதத்துக்கெதிரான வெற்றியைத் தொடர்ந்து, வடக்கிலுள்ள யாழ்ப்பாண மாநகர சபை, வவுனியா நகர சபை ஆகியவற்றின் உள்ளூராட்சித் தேர்தல்களை நடாத்துவதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

வடக்கில் உள்ளக இடப்பெயர்வுக்குள்ளாகியிருந்த ஏறத்தாழ 300,000 பேரை மீளக்குடியமர்த்துவதற்கான முக்கியமான அர்ப்பணிப்பொன்றை, 180-நாள் மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு வேலைத்திட்டத்தின் கீழ் ஜனாதிபதி ராஜபக்‌ஷ மேற்கொண்டார். 290,000 பேருக்கும் மேற்பட்ட உள்ளக இடப்பெயர்வுக்குள்ளான அனைவரையும், அரசாங்கமானது முரண்பாடு முடிவடைந்து மூன்று வருடங்களில், செப்டெம்பர் 2012இல் மீள்குடியமர்த்தியது. ஆயுத முரண்பாட்டினால் பாதிக்கப்பட்ட நாடுகளிடையே, அவ்வாறான வேகமானதும் வெற்றிகரமானதுமான பணிக்கான சாதனையை இது படைத்திருந்தது. மேலும், எல்ரிரிஈ-இனால் கண்ணிவெடி புதைக்கப்பட்டிருந்த மாபெரும் நிலப்பரப்புகளும் கண்ணிவெடியகற்றப்பட்டு, மீள்குடியமர்வுக்கு பாதுகாப்பானதாக மாற்றப்பட்டது.

மஹிந்த ராஜபக்‌ஷ அவர்கள் விசேடமாக வலியுறுத்திய விடயம், முன்னாள் எல்ரிரிஈ போராளிகளின், குறிப்பாக எல்ரிரிஈ-இனால் படைக்குச் சேர்க்கப்பட்ட சிறுவர் போராளிகளின், புனர்வாழ்வு ஆகும். ஏறத்தாழ 11,000 எல்ரிரிஈ போராளிகள், அரசாங்கப் படையினரிடம் சரணடைந்தனர். முன்னாள் சிறுவர் போராளிகள் அனைவரும் அவர்களது பெற்றோருடன் மீளச் சேர்க்கப்பட்டனர். அவர்களில் பலர், வட பகுதிகளிலும் கொழும்பு மாவட்டத்திலும் வழக்கமான பாடசாலைகளுக்குச் செல்லத் தொடங்கினர்.

வடக்கின் அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்காகவும் வடக்குப் பகுதியிலுள்ள மக்களை நாட்டின் முன்னேற்றத்தின் பங்குதாரர்கள் ஆக்குவதற்காகவும், ஜனாதிபதி ராஜபக்‌ஷவின் விசேட முன்னெடுப்பாக வடக்கின் வசந்தம் அமைந்தது. இந்த வேலைத்திட்டமானது உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக வடக்கில் பாரியளவு முதலீடுகளை ஏற்படுத்தியது. உள்ளூர், வெளிநாட்டு வங்கிகள், ஏனைய நிதிச் சேவை நிறுவனங்களின் கிளைகளின் திறப்பு உள்ளடங்கலாக, கணிசமானளவு முதலீடும் இப்பிராந்தியத்துக்குக் கிடைக்கப்பெற்றது. நாட்டின் சுற்றுலாத்துறை வரைபடத்தில், வடக்கானது திரும்பவும் உள்ளடக்கப்பட்டது

நல்லிணக்கம்

ஜனநாயகத்துக்கும் பன்முகத்தன்மைக்குமான அவரது அர்ப்பணிப்பு காரணமாகவும், மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நாட்டில் காணப்பட்ட முரண்பாட்டுக்குப் பின்னர் சமூகங்களிடையே நல்லிணக்கத்துக்கான தேவையைப் புரிந்து கொண்டதன் காரணமாகவும், ஜனாதிபதி ராஜபக்‌ஷ அவர்கள் மே 2010இல், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்தார். எல்ரிரிஈ-உடனான முன்னைய போர்நிறுத்தங்களின் தோல்விக்கான காரணங்கள், எல்ரிரிஈ பயங்கரவாதம் மற்றும் அதற்கு எதிரான போர் ஆகியவற்றில் மக்கள் எதிர்கொண்ட உண்மையான இன்னல்கள், மீளக்கொண்டு வரப்படக்கூடிய நீதியின் அடிப்படையில் சமூகங்களிடையே நல்லிணக்கத்தை வேண்டுதல் ஆகியவற்றைக் கற்பதற்காக இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக, முக்கியமான அமுல்படுத்தும் முகவராண்மைகளுடனான பல சுற்று ஆலோசனைகளின் பின்னர், அந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அமுல்படுத்தலைக் கண்காணிப்பதற்காக, தேசிய செயற்பாட்டுத் திட்டமொன்று உருவாக்கப்பட்டது. ஜனாதிபதி ராஜபக்‌ஷவின் காலத்தின் போது அச்செயற்றிட்டத்தின் கீழ் அடையப்பட்ட முன்னேற்றங்களை www.llrcaction.gov.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிடலாம்.