ஜூன் 25 இல் பாராளுமன்றத்தில் பிரதமரின் கருத்துக்கான பதில்

By November 18, 2016News

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கடந்த வியாழக்கிழமை (ஜூன் 25) பாராளுமன்றத்தில் பிரதமரால் முன்வைக்கப்பட்ட கருத்து பாராளுமன்றத்தையும் பொதுமக்களையும் தவறாக வழிநடத்தியுள்ளது. பிரதமரால் வாசித்தளிக்கப்பட்ட பட்டியலைக் கேட்கும் எவராவது, நாட்டில் சிறந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னாள் ஜனாதிபதி கொண்டுள்ளார் என எண்ணக்கூடும். பிரதமர் பாதி உண்மைகளைத் தெரிவித்தமையே மிகவும் கேடானதும் தீங்கிழைப்பதும் ஆகும். அத்தோடு அவர் தெரிவித்த பொய்யான கருத்துக்களை எல்லா மாற்றங்களையும் ஏற்படுத்துவதோடு, முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பையும் இக்கட்டுக்குள்ளாக்கிறது.

பிரதமர் தெரிவித்ததைப் போன்றே முன்னாள் ஜனாதிபதிக்கு 105 பொலிஸாரும் 105 இராணுவ ஆளணியினரும் வழங்கப்பட்டுள்ளதோடு, அவர்களுடன் குண்டுதுளைக்காத மூன்று வாகனங்களும், மற்றும் இரண்டு ஜீப் வாகனங்களும் ஒரு இரட்டை கப் வண்டியும் வழங்கப்பட்டுள்ளது. தங்காலையிலுள்ள கால்டன் இல்லத்தில் தொழிற்படும் நிலையிலுள்ள எக்ஸ் கதிர் இயந்திரமொன்று உள்ளதோடு, கையில் வைத்துப் பயன்படுத்தப்படும் தொழிற்படும் நிலையிலுள்ள உலோக உணர்வி ஒன்றும் காணப்படுகிறது. ஒதுக்கப்பட்டுள்ள ஏனைய எல்லா உபகரணங்களும் பழையனவாகவும் பயன்படுத்த முடியாதனவாகவும் உள்ளன.

மேலும், முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மூன்று மோட்டார் வண்டிகளும் ஒரு காரும் மூன்று லான்ட் குரூஸர்களும் மூன்று டிஃபன்டர்களும் இரண்டு இரட்டை கப் வண்டிகளும் இரண்டு தனிக் கார்களும் நான்கு ட்ரக் வண்டிகளும் இரண்டு பேருந்துகளும் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்திருந்த போதிலும், அது முழுவதிலுமாக உண்மையற்றதாகும்.

பயங்கரவாதத்தைத் தோற்கடித்த ஜனாதிபதி தொடர்ந்தும் பயணித்துவரும் நிலையில், அவருக்கான பாதுகாப்புப் படைப்பிரிவுக்கான போக்குவரத்து வசதிகளை வழங்காமலும், தொழிற்படாத பழைய உபகரணங்களை வழங்குவதனூடாகவும் இந்த அரசாங்கம் அவரது பாதுகாப்புக்கு ஆப்ததை ஏற்படுத்தி வருகிறது. பாதுகாப்புப் பிரிவினருக்கு அலுவலக வசதிகளெவையும் வழங்கப்படாததோடு, பொலிஸ் அதிகாரிகளுக்கு மிகவும் எளிய வதிவிட வசதிகளை வழங்குவதனூடாக அவர்களை மனரீதியாகச் சோர்வடையச் செய்கிறது. அதேநேரத்தில், முன்னாள் ஜனாதிபதிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக நாட்டின் உயரிய பதவிகளில் இரு;பபோரால் பொய்யான தகவல்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.