கிறிஸ்மஸ் செய்தி

By November 18, 2016News

அனைத்து இலங்கையர்களுக்கும், மகிழ்வான கிறிஸ்மஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சமாதானத்தையும் அன்பையும் பரப்புவதற்கே, கிறிஸ்மஸ் கொண்டாடப்படுகிறது.

ஏழைகளிடத்தே கருணையை வெளிப்படுத்துதலும், பல்வேறுபட்ட இன, மதக் குழுக்களுக்கிடையில் நல்லுறவைக் கட்டியெழுப்புதலும், கிறிஸ்மஸ் காலத்தில் இடம்பெற வேண்டும். மீட்பரான யேசு கிறிஸ்துவின் “அயலவரை நேசியுங்கள்” என்ற நற்செய்திக்கு அமைவாக, நாட்டிலுள்ள பல்வேறான இன, மதக் குழுக்களுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை, கடந்த காலத்தில் நாம் மேற்கொண்டிருந்தோம்.

மீட்பரான யேசு கிறிஸ்து, “எனது பெயரில், யாரெல்லாம் குழந்தையொன்றை ஏற்கிறார்களோ, அவர்கள் என்னை ஏற்கிறார்கள்” எனத் தெரிவித்தார். கிறிஸ்தவ வரலாற்றின்படி, மீட்பர் பிறந்தபோது, அவரை மூன்று வானதூதர்கள், விண்மீன்களுக்கு நடுவே வழிநடத்திச் சென்றார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. கிறிஸ்மஸ்ஸின் மகிழ்ச்சியை நாம், சிறுவர்களின் இதயத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். அதனூடாகத் தான், சமாதானம், அன்பு ஆகியவற்றின் செய்தியை, கிறிஸ்மஸ் காலத்தில் பரப்பச் செய்யலாம்.

சமாதானமும் மகிழ்ச்சியும் நிறைந்த கிறிஸ்மஸ் தினத்துக்கு எனது வாழ்த்துகள்.