உருக்குக் கூட்டுத்தானத்தினதும் டுபாய் மரியொட் ஹொட்டலினதும் உரிமை தொடர்பாக விசாரணை

By November 18, 2016News

உருக்குக் கூட்டுத்தாபனத்தில் முதலிடப்பட்டுள்ள 48 மில்லியன் அமெரிக்க டொலர்கள், டுபாயிலுள்ள மரியொட் ஹொட்டலில் முதலிடப்பட்டுள்ள 190 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகியன உண்மையிலேயே எனக்குச் சொந்தமானவை எனவும், சந்தன லொக்குவிதான வெறுமனே பெயருக்காக நியமிக்கப்பட்டவர் எனவும் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பொலிஸ் பிரிவான நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவானது (நி.கு.பு.பி) கடுவெல நீதவான் நீதிமன்றத்துக்கு “பி” அறிக்கை மூலமாக அறிவித்துள்ளது. நி.கு.பு.வி-இற்கு அனுப்பிவைக்கப்பட்ட அநாமதேயக் கடிதத்தின் அடிப்படையில் தாங்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அந்த “பி” அறிக்கை தெரிவிக்கிறது. அரசியல் எதிரணியினரை துன்புறுத்துவதற்காக இந்த நி.கு.பு.பி உருவாக்கப்பட்டுள்ளதோடு, இப்பிரிவின் உருவாக்கத்தின் சட்டரீதியான தன்மையும் ஒழுங்கை முறையும் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் காணப்படுகிறது.

அநாமதேயக் கடிதத்தின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நீதிமன்றத்துக்கு பொலிஸார் அறிக்கை சமர்ப்பிப்பது மிகவும் அசாதாரணமாகும். ஐதேக-வின் நீட்டமாகச் செயற்படும் நி.கு.பு.பி-ஆனது, என்னால் உரிமைக்குட்படுத்தப்பட்ட மறைக்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பாக “நீதிமன்ற வழக்கொன்று” உள்ளதாக பொதுமக்களுக்கு பொய்யான எண்ணத்தை வழங்குவதற்காக இந்த “பி” அறிக்கையைச் சமர்ப்பித்திருக்கலாம். பாராளுமன்றத் தேர்தலொன்று விரைவில் இடம்பெறவுள்ள நிலையில், அவ்வாறான எண்ணமொன்றை பொதுமக்களிடம் ஏற்படுத்துவது, எனது எதிரணியினருக்கு உதவிகரமானதாக அமையலாம். எனக்கெதிராக பொய்யான பரப்புரைகளை மேற்கொள்வதற்கான மற்றுமொரு புத்திசாதுரியமானதும் வஞ்சகமானதுமான வழியாகும். உருக்குக் கூட்டுத்தாபனமும் டுபாய் மரியொட் ஹொட்டலும், யார் அவற்றை உரிமையாகக் கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கே சொந்தமானதெனவும் என்னானல்ல என்பதையும் நான் பொதுமக்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.